ரமலான் மாதத்தில் முஸ்லீம்களுக்கு பெரிதும் பயனுள்ள ஆப்ஸ் !இது அண்ட்ராய்டு போனும் செயலிகளும் மனிதர்களை வழிநடத்தும் காலம். தற்போது நடைமுறையிலுள்ள சில செயலிகள் எதிர்வரும் புனித ரமலானில் நமக்கு எவ்வாறு எல்லாம் உதவும் என்பதை குறித்து சிறு பார்வை.

சில ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள 'Muslim Pro' என்ற இந்த செயலியில் துஆக்கள், அஸான், இங்கிலீஷ் மற்றும் அரபி மொழியில் குர்ஆன் மற்றும் மொழிபெயர்ப்பு, இக்ரா அல் குர்ஆன் எனும் குர்ஆன் ஓதல் (கிராஅத்), கிப்லா திசைகாட்டி, தஸ்பீஹ் சொற்கள், ஜகாத் கணக்கீடுகள் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டர் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் வைபை தொடர்பு இல்லாமலும் செயல்படும்.

மேலும், துல்லிய நேரத்தில் பாங்கு சொல்வதால் உலகளவில் பெரும்பாம்மையினரால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. இதனுள்ளே ஹிஸ்னுல் முஸ்லீம் (முஸ்லீம்களின் அரண்) எனும் துஆ, திக்ருகளின் தொகுப்பும், ஹலால் உணவகங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் குறித்த விபரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.

'ShareTheMeal' என்ற மற்றொரு செயலி ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பால் செயல்படுத்தப்படுகிறது. ஈந்து உவக்கும் புனித ரமலானில் முஸ்லீம்கள் அதிகமதிகம் தான தர்மங்களை வழங்குவார்கள். முஸ்லீம்கள் இந்த செயலி மூலம் வழங்கும் அரை டாலர் அளவு தர்மம் ஒருவரின் ஒருவேளை பசியை போக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தொடர்வதன் மூலம் தங்களுடைய கொடை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை அறியும் வசதியும் உள்ளதாக சிலாகிக்கின்றார் இதை தொடர்ந்து பயன்படுத்தும் தானா அஹமது என்கிற துபைவாசி.

Source: Khaleej Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.