மதுக்கூரில் அனைத்து சமுதாய மக்களுக்காக புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் !தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்கள் பயன்பெரும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டம் மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் முஹம்மது இலியாஸ் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமுமுக மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் மமக மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுசா, மமக மாநில அமைப்புச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், தமுமுக துபாய் மண்டல முன்னாள் செயலாளர் எஸ்.எம் ஹாஜா முகைதீன், மாநில ஊடகப்பிரிவு துணைச் செயலாளர்  ஏ. ஃபவாஸ்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக தமுமுக மதுக்கூர் பேரூர் செயலாளர் அப்பாஸ் வரவேற்றுப் பேசினார். முடிவில் மதுக்கூர் பேரூர் தமுமுக துணைச் செயலாளர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், ஜமாத்தினர், சங்க நிர்வாகிகள், தமுமுக-மமகவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.