உ.பி.யில் இந்து பெண்ணைதிருமணம் செய்த இஸ்லாமியஇளைஞரின் உறவினர் அடித்துக்கொலைஉ.பி.யில் இந்து பெண்ணை இஸ்லாமிய இளைஞர் திருமணம் செய்த விவகாரத்தில் இளைஞரின் உறவினர் அடித்துக்கொலை

 இந்து யுவ வாஹினி  என்ற தீவிரவாத அமைப்பினரின் வெறிச்செயல்

உத்தரபிரதேசத்தில் இந்து பெண்ணை இஸ்லாமிய இளைஞர் காதல் திருமணம் செய்ய உதவியதாக உறவினர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்சாகர் மாவட்டம் சோகி கிராமத்தை சேர்ந்த யூசப்(19) என்ற இளைஞர் 18 வயதான இந்து பெண் ஒருவரை காதலித்துள்ளார். அதை தொடர்ந்து கடந்த மாதம் 27-ம் தேதியன்று வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசில் புகாரளித்த பெண் வீட்டார், காதல் திருமணத்துக்கு உதவியதாக இளைஞரின் உறவினர் குலாம் முகமது(45) மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குலாம் வீட்டுக்கு வந்த இந்து யுவ வாஹினி என்ற அமைப்பினர், குலாமை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து திருமணம் செய்த காதல் ஜோடி குறித்து விசாரித்துள்ளனர். அதை தொடர்ந்து குலாமை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து இந்து யுவ வாஹினி அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.