அபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டம் !அபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் மின்சாரம் (Solar Power Plant) தயாரிக்கும் கூட்டுத் திட்டத்திற்கான பணி ஒப்பந்தம் அபுதாபி, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.

அபுதாபி அல் சுவைஹான் பகுதியில் 7.8 சதுர கி.மீ பரப்பளவில் 870 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு மத்தியில் திறக்கப்படவுள்ளது. இந்த சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் மூலம் சுமார் 1,177 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) உற்பத்தியில் அபுதாபி சுமார் 7 விழுக்காடு மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் தயாரித்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.
Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.