ஒட்டுமொத்த வக்ப் சொத்துக்களையும் மீட்டெடுக்க அருமையான வாய்ப்பு..!'அங்கீகாரமற்ற வீட்டுமனை வரன்முறை திட்டம்' ...

வக்ப் சொத்துக்களை மீட்டெடுக்க, கிடைத்த வரப்பிரசாதம்..!!

நேற்று உதித்த தெலுங்கானா மாநிலம், வக்ப் சொத்து பட்டியலை வெளியிடும்போது...

தமிழக வக்ப் சொத்து பட்டியலை தயார் செய்திட முடியாதா..?

(வக்ப் வாரியத்துக்கு போதிய அளவு ஊழியர்களை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நியமிக்க வேண்டும்.)

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் மற்றும் கட்டிடங்களை வரன்முறை படுத்தாமல் பத்திரப்பதிவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக மக்கள் வைத்திருக்கும் சொத்துக்களில் 85% சொத்துக்கள் அங்கீகாரம் பெறப்படாதவை தான் என்பது அதிர்ச்சியான உண்மை.

தற்போது அரசு வெளியிட்டுள்ள வரன்முறை திட்டத்தில், அங்கீகாரம் பெறப்படாத வீட்டுமனை மற்றும் கட்டிடங்களை மாநாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளிட்ட நிர்வாகங்களிடம் சென்று, தங்கள் சொத்து குறித்த விவரங்களை ஆய்வுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்தபிறகே வரன்முறை படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் அச்சொத்து,
கோவில், மற்றும் வக்ப் வாரியத்துக்கு சொந்தமானதாக இருந்தால் அதை வரன்முறை படுத்த முடியாது, விற்கவோ-வாங்கவோ முடியாது.

அவ்வளவு ஏன், வரன்முறை படுத்தாத சொத்துக்களை வாரிசுரிமை அடிப்படையில் தானம் செய்யவும் முடியாது.

ஆனால், பிரச்சினை என்னவென்றால்,
எது வக்ப் சொத்து..?

எந்த சர்வே எண்கள் வக்புக்கு சொந்தமானது..?? என்பது, வரன்முறைபடுத்தும் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரியாது.

எனவே, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள வக்ப் கண்காணிப்பாளர்களும் அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட சொத்து வரன்முறை திட்ட அதிகாரிகளுக்கு, வக்ப் சொத்து பட்டியலை தபால் மூலம் அனுப்பிவைத்து வக்ப் சொத்தை தனியார் எவருக்கும் வரன்முறை படுத்திக் கொடுக்கக் கூடாது என்று முன்கூட்டியே ஆட்சேபனை செய்யவேண்டும்.

மேலும் வக்ப் வாரிய நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளி ஜமாத்தினரும், தங்கள் பள்ளி சொத்துக்கள் குறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு எழுத்துவடிவ ஆட்சேபனை கடிதங்களை வழங்குவதுடன், வக்ப் சொத்துக்கள் எதுவும் முறைகேடாக வரன்முறை படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சமுதாய ஆர்வலர்கள் சிலர் 'தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி'யும் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் செயலாற்ற முடியும்.

மொத்தத்தில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள வரன்முறை திட்டத்தை முறையாக கண்காணித்தால், வியசாய பயன்பாட்டில் இருக்கும் நிலங்களை தவிர, எஞ்சியுள்ள ஒட்டுமொத்த வக்ப் சொத்துக்களையும் மிக எளிதாக மீட்டிட முடியும்.

மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு:

ஜாகிர் ஹுசைன்
(மறுப்பு அட்மின்)

9380945727
9444781644

குறிப்பு:

படத்தில் காட்சி தரும் 'Lanco Hills' கட்டிடம் வக்புக்கு சொந்தமானது,

மேலும் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 78,000 ஏக்கர் வக்ப் சொத்து உள்ளது என்று கணக்கிடப் பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.