அதிரை ஈசிஆர் சாலையில் நவீன கட்டமைப்பில் புதிதாக 'ஈஸ்ட் கோஸ்ட் அகடாமி சிபிஎஸ்இ பள்ளி' துவக்கம் !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையொட்டி ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி பகுதியில், நடப்பு 2017 கல்வி ஆண்டு முதல் நவீன காற்றோட்டமான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சிபிஎஸ்இ பாடத்திட்ட அங்கீகாரத்துடன், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின், 'ஈஸ்ட் கோஸ்ட் அகடாமி' புதிய கல்விக்கூடம் தொடங்க உள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 22 ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கான புதிய சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேர்க்கைகான விண்ணப்ப படிவங்கள் கீழ்காணும் முகவரியில் பெறலாம்.
திருமதி டி.வி ரேவதி
ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி
கிழக்கு கடற்கரைச்சாலை
ஏரிப்புறக்கரை, அதிராம்பட்டினம்
91 98416 99789 / 86103 55806

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
அகமது அன்வர்
யுனைடட் பவுண்டேஷன்
நடுத்தெரு, அதிராம்பட்டினம்
0091 79043 74092

கல்விக்கூடத்தின் சிறப்பு அம்சங்கள்:
1. 10 ஏக்கர் பரப்பளவில் பரந்த இடத்தில் அமைந்துள்ளது.
2. நன்கு பயிற்சியும், அனுபவமும் பெற்ற ஆசிரியப் பெருமக்கள்
3. நவீன தொழில்நுட்ப வசதி
4. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்
5. நூலக வசதி
6. இஸ்லாமிய மார்க்க கல்வி மற்றும் அரபி மொழிப் பயிற்சி
7. ஹிந்தி பாடப் பயிற்சி
8. திறன் மேம்பாடு சிறப்பு பயிற்சி
9. விளையாட்டு மற்றும் தற்காப்பிற்கான சிறப்பு பயிற்சி
10 பாதுகாப்பான வாகன வசதி
11. விடுதி வசதி
12. குறைந்த கல்வி கட்டணம்.

'கே.ஜி' வகுப்பு சிறப்பு அம்சங்சங்கள்:
1. மாணவர்களை மையப்படுத்திய கற்றல்முறை
2. தரமான கல்வி
3. உலகத்தரமான பாடத்திட்டம்
4. தரமான கற்றல் - கற்பித்தல் மற்றும் கற்றல் உபகரணங்கள்
5. தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி
6. சிசிஇ முறை மதிப்பீடு
7. சிசிடிவி கண்காணிப்பு
8. நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்

கிரேடு I முதல் VII வரை சிறப்பு அம்சங்கள்:
1.சிபிஎஸ்இ பாடத்திட்டம்
2. இஸ்லாமிய மார்க்க கல்வி மற்றும் அரபி மொழிப் பயிற்சி
3. நட்பான சூழல் சார்ந்த அணுகுமுறை
4. பகுத்தறிவு சிந்தனை உடன் கூடிய கல்வி
5. இணையவழிக் கலந்தாய்வு முறையில் கற்பித்தல்
6. நான்காம் வகுப்பு முதல் ஒலிம்பியாட் திட்ட முறைப்படி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவுத்திறன் தேர்வுகளுக்கான பயிற்சி
7. பெற்றோர்களுக்கு இ-நாட்குறிப்பு வசதி
8. ஒழுக்கம் மற்றும் ஆளுமைத்திறன் வளர்ச்சியுடன் கூடிய பாடத்திட்டம்
9. குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையிலான கூடிய மாணவர் - ஆசிரியர் விகிதம்
10. புதுமை, படைப்பாற்றல் மற்றும் ஆராய்ச்சித் திறன் வழங்கும் கற்றல் அனுபவங்கள்
11. பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள்
12. விளையாட்டுப் பயிற்சிகளுக்கான அதிநவீன கட்டமைப்பு வசதிகள்

குறிப்பு:
1. கே.ஜி வகுப்பு முதல்  கிரேடு III வகுப்பு வரை இருபாலர் கல்வி முறை..
2. கிரேடு  IV வகுப்பு முதல்  VII வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும்..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.