முத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்புமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம்  மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை  போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த  கற்பகநாதர்குளம் கோவிலடியை  சேர்ந்தவர் அம்சவள்ளி(65). நேற்று முன்தினம் இரவு  வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தவர்  வீட்டிற்குள்  புழுக்கமாயிருந்ததால் அதிகாலை 3மணியளவில் காற்றுக்காக வீட்டு வாசலில் வந்து படுத்திருந்தார். அப்பொழுது  முகத்தில் கர்ச்சீப் கட்டியவாறு அங்கு வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அம்சவள்ளி கழுத்திலிருந்து மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துகொண்டு தப்பியோடிவிட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த அம்சவள்ளி இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.