இரண்டு பிள்ளைகளுக்கு மேல் வேண்டாம் - தமிழக அரசின் மறைமுக செயல் திட்டம்.இஸ்லாமிய அமைப்புகளின் கவனத்திற்கு, நாம் அனைவரும் நினைத்துக்  கொண்டிருக்கிறோம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாபா ராம் தேவ் மற்றும் பிஜேபி தலைவர்கள் முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக் கூடாது , அவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய வேண்டும் என்று அதிகமாக சொல்லி வருவதை பத்திரிகை, மீடியா வழியாக நாம் அறிவோம். இவர்கள் இதனை ஏதோ போகிற போக்கில் சொல்கிறார்கள் என்று நாம் விளையாட்டாக எடுத்துக் கொண்டாேம்.

ஆனால் இந்த செய்தி இப்போது தமிழக அரசு மூலமாக செயல் வடிவம் பெற்றுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இன்று எனது மனைவியிடம் அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவர்  தாங்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளது என்று விசாரித்து விட்டு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும், இரண்டு குழந்தைகள் உள்ளவர்கள் கட்டாயம் கருத்தடை செய்ய வேண்டும் என்றும், அல்லது காப்பர் டி கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவு என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் உங்கள் மதத்தில் இதற்கு அனுமதி இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் இதனை தாங்கள் மற்றும் அனைத்து முஸ்லிம் பெண்களும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வருகின்ற வியாழக்கிழமை கணக்கெடுப்பிற்க்கு வரும் உயர் அதிகாரிகளிடம் ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவிக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். மேலும் இந்த கணக்கெடுப்பு முஸ்லிம் அதிகமாக வாழும் பகுதிகளில் மட்டும் எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் உடனடியாக கலத்தில் இறங்கி இதனை அரசு அனைவருக்கும்  கட்டாய படுத்தாமல் விரும்பியவர்கள் கருத்தடை செய்து கொள்ளுங்கள் என்ற ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த செய்தியை படிப்பவர்கள் காப்பி செய்து உங்கள் டைம் லைன்ல ஷேர் செய்து கொள்ளுங்கள். மற்றும் வாட்ஸ் அப் குருப்களிலும் ஷேர் செய்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.இதனை நாம் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நமது வருங்காலம் கேள்விக் குறி மற்றும் இறைவனின் கட்டளைகளை மீறி பாவத்தாளியாக விடுவோம்.

.S.K.அப்துல்சமது
மனிதநேய ஜனநாயக
கட்சி. புதுச்சேரி.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.