முத்துப்பேட்டையில் போலீசார் பற்றாக்குறையால் கேள்விக்குறியான கடலோர பாதுகாப்புமுத்துப்பேட்டையில் போலீசார் பற்றாக்குறையால் கடலோர பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் தெற்குக்காடு  கடற்கரை காவல் நிலையம் சென்று ஆண்டு  ரூ.60 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டி திறக்கப்பட்டது. முன்பு பட்டுக்கோட்டை சாலையில் குடியிருப்பு பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்ததால் போதிய வசதிகள் இல்லை என்றும், உயர் அதிகாரிகள் வருவதில் சிரமம் மற்றும் குற்றவாளிகளை கொண்டு வருவதிலும் அவர்களை விசாரிப்பதிலும் சிக்கல் உள்ளதால் இந்த புதிய கட்டிடம் இப்பகுதியில் தேர்வு செய்து கட்டப்பட்டது.

இக்கட்டிடத்தில் செயல்படும் கடலோர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 9 போலீசார் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்பொழுது ஒரேயொரு இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ என இருவர் மட்டுமே இங்கு பணியில் உள்ளனர். மற்ற 7 போலீசார் பணியிடம் காலியாகவே உள்ளது. மேலும் மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்கே தேவையான போலீசாரை பணியமர்த்த முடியவில்லை. அதனால் கடற்கரை காவல் நிலையங்களுக்கு  போலீசாரை அனுப்ப முடியாதென மாவட்ட அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்து விட்டனர். அதனால் இங்கு போதிய போலீசார் நியமனம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் முத்துப்பேட்டை ஒட்டியுள்ள  பேட்டை செக்போஸ்டையும் போலீசார் பற்றாக்குறையை காரணமாக்கி அதிகாரிகள். மூடிவிட்டனர். அதனால் பதற்றங்கள் நிறைந்த இந்த  முத்துப்பேட்டை கடலோர பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்டது. இதனால் இந்த கடற்கரை காவல் நிலையம்  தற்போது பெயரளவுக்கே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துப்பேட்டை கடற்கரை பகுதி இந்தியாவின் தெற்கு எல்லை பகுதியாகும். இங்கு ஒரு காலத்தில் கடத்தல் தொழில் கொடிகட்டி பறந்தது. இங்கிருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் ஒருமணிநேரத்தில் சென்று விடலாம் என்பதால் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் ஊடுருவும்
வாய்ப்புகளும் உள்ளன.

 மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு பிறகு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதற்கு முன்பு இப்பகுதியில் உள்ள கடல் வழியாக இலங்கையிலிருந்து  தினமும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருந்து வந்தது. இந்நிலையில் கடற்க்கரை ஓட்டி ஆசியாவின் மிகப்பெரிய அலையாத்திகாடுகள் இருப்பதால் அதில் சமூக விரோதிகள் ஊடுருவி மறைந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அந்தவகையில் மர்ம படகுகள் நடமாட்டம், கடத்தல் ஊடுருவல்கள். ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக பயனுக்கு வந்த இந்த கடற்கரை காவல் நிலையம் தற்பொழுது  மாவட்ட அதிகாரிகளின் நடவடிக்கையால் செயலிழந்து விட்டது. எனவே அதை முழுபயன்பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு வருவதோடு கடலோர பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டுமென இப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.