பட்டுக்கோட்டையில் தமுமுக-மமக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக மாவட்ட நிர்வாகிகள் தேர்வு ! தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த பொதுக்குழுக்கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தமுமுக- மமக ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் அப்துல் சமது தலைமை வகித்தார். தமுமுக பொதுச்செயலர் பி.எஸ் ஹமீது, மமக மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டச் செயலர் எம். ஆர் கமாலுதீன் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் தமுமுக/மமக ஒருங்கிணைந்த மாவட்டத்தலைவராக அதிரை அஹமது ஹாஜா, தமுமுக மாவட்டச் செயலராக பட்டுக்கோட்டை ஷேக், மமக மாவட்டச் செயலராக மதுக்கூர் ஜபருல்லாஹ், தமுமுக/மமக பொருளாளராக இன்ஜினியர் இலியாஸ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தொடக்கத்தில், மாநில ஊடகப்பிரிவு துணைச்செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் வரவேற்றுப்பேசினார். கூட்ட முடிவில் தமுமுக/மமக மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் மமக மாவட்டச் செயலர் எம். கபார் உட்பட பட்டுக்கோட்டை, அதிரை, மதுக்கூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுக, மாமகவினர் கலந்துகொண்டனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.