மழை வேண்டி அதிரையில் நடந்த சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்பட பலர் பங்கேற்பு ( படங்கள் )தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் வறண்டு காணப்படும் பகுதிகளுக்கு மழை பெய்ய வேண்டி, அதிரை ஈசிஆர் சாலை பிலால் நகர் கிராணி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நேற்று செவ்வாய்கிழமை காலை 7 மணியளவில் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலப் பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு சிறப்புத் தொழுகையை நடத்தினார். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வறட்சிப் பகுதிகளில் தாமதமின்றி மழை பொழிய வேண்டும், ஆடு, மாடு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கு பயன்தரும் மழையைப் பொழியவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனையில் கலந்துகொண்ட ஆண்கள் அனைவரும் தாங்கள் அணிந்து இருந்த சட்டையை திருப்பி அணிந்துகொண்டு, இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.