அதிரை கரையூர் தெரு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு TNTJ அதிரை கிளை நிவாரண உதவி !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

தகவலறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாதிப்படைந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் TNTJ கிளை சார்பில் முதல் கட்டமாக அரிசி, ஸ்டவ், அட்டை குடம், தண்ணீர் பட்டால் உள்ளிட்ட நிவராணப் பொருட்கள் பாதிப்படைந்த 42 குடும்பங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை வழங்கினார்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.