சவூதியில் 200 சிறைவாசிகளை விடுதலை செய்ய 15 மில்லியன் ரியால் நிதி திரட்டு!சவுதியில் இப்புனிதமிகு ரமலானில் தனிப்பட்ட சில உரிமை மீறல் காரணங்களுக்காக  சிறைபட்டுள்ள சுமார் 200 சிறைவாசிகளை மீட்கும் நோக்குடன் சுமார் 15 மில்லியன் ரியாலை திரட்டியுள்ளது சவுதியில் தேசியளவில் செயல்படும் 'தரஹூம் கமிட்டி' (Tarahum Committee). கடந்த வருடம் இதுபோல் சுமார் 250 சிறைவாசிகளை விடுவித்துள்ளது தரஹும் கமிட்டி.

நீண்ட நாள் சிறையிலிருப்பவர்கள், நோயாளிகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து விடுதலைக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. சிறைவாசிகள் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் சுமார் 40 முதல் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யும்படி எதிர்த்தரப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு மீதத்தொகை சிறைவாசிகளின் சார்பாக தரஹூம் செலுத்துகின்றது.

சிறை விடுதலைக்குப் பின் அவர்களின் குடும்பத்தாருடன் கலந்தாலோசிக்கும் தரஹூம் கமிட்டி, அவர்களுக்கான வருவாய், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டுதல்களையும் பொருளாதார உதவிகளையும் வழங்குகின்றன. இந்த உதவித் திட்டங்களை ரமலானுக்குப் பின்னும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் செயல்படுத்துகின்றது தரஹூம் கமிட்டி.

இதுபோன்ற நல்ல திட்டங்களை நாமும் முன்மாதிரியாக கொள்ளலாமே.

Source: Saudi Gazette
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.