கத்தாருடன் சவூதி, அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய 4 அரபு நாடுகள் ராஜாங்க உறவுகளை துண்டித்தது !தீவிரவாதத்திற்கு உதவுவதாக கூறி கத்தார் நாட்டுடனான ராஜாங்க ரீதியிலான உறவுகள், அனைத்து போக்குவரத்து ரத்து, எல்லை மூடல் என அனைத்து வகையான உறவுகளையும் உடனடியாக துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய 4 அரபு நாடுகள் அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பை தொடர்ந்து விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து அனைத்தும் உடனடியாக நிறுத்திக் கொண்டுள்ளதுடன் தனது எல்லையையும் மூடியுள்ளது சவுதி அரேபியா. பஹ்ரைனும் தனது உறவுகள் கத்தாருடன் துண்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

அதேபோல் ஜக்கிய அரபு அமீரகமும் அனைத்து வகை போக்குவரத்துக்களையும் நிறுத்தியுள்ளதுடன் 48 மணிநேரத்திற்குள் தனது தூதரக அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைத்துள்ளது மேலும் 14 நாட்களுக்குள் கத்தார் நாட்டு மக்கள் அமீரகத்தை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், டிரான்ஸிட் பயணியாக கூட கத்தார் வழியாக அமீரகத்தினர் பயணிக்கவும், அமீரகம் வழியாக கத்தார் மக்கள் பயணிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிஹாத் விமான நிறுவனமும் தனது சேவையை (இன்று இரவு) செவ்வாய் அதிகாலை 2.45 மணி விமானச் சேவையுடன் அரசின் மறுஅறிவிப்பு வரும்வரை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. எகிப்தும் தனது விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை கத்தார் நாட்டு விமானங்களும் கப்பல்களும் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.
சிரியாவின் கொடுங்கோலன் பஸார் அல் அசத்தின் படைகளை எதிர்த்து போரிடும் போராளிகள், ஐஸ் பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி செய்தல், அல் காயிதாவிற்கு ஆதரவளித்தல், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் காலித் மெஷல் அவர்கள் கத்தாரில் தங்கியிருக்க அனுமதித்தது, ஆப்கன் தாலிபன்கள் கத்தாரில் அலுவலகம் திறக்க அனுமதித்தது,

ஈரான் ஆதரவு ஹவ்தீ தீவிரவாதிகளுக்கு எதிராக ஒருபுறம் ஏமனில் நடைபெறும் போரில் அரபு கூட்டணி படையிலும் இடம்பெற்றுக் கொண்டு இன்னொருபுறம் ஈரானுக்கு ஆதரவாக நடந்து கொள்வது என இந்த 3 நாடுகளும் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்.

கத்தார் நாடு அமெரிக்கா தலைமையிலான தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டாளி என்பதுடன் தனது அல் உதைது ராணுவ விமான தளத்தை அமெரிக்காவிற்கு தரைவார்த்துள்ளது நிலையில் சக அரபு நாடுகளால் தீவிரவாத ஆதரவு குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது.

அதேவேளை உலகமகா பயங்கரவாத நாடான அமெரிக்காவிற்கு சவுதியும், அமீரகமும் ஆதரவளித்து வருகின்றன. மேலும், ராணுவ பயங்கரவாதிகளால் நடத்தப்படும் எகிப்திய அரசுடனும் நட்பு பாராட்டி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவுதி அரசு மற்றும் அதன் ராணுவத்தின் ஆதரவில் உள்ள பஹ்ரைன் மட்டுமே ஈரான் ஆதரவு ஷியா தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, தீவிரவாத குற்றச்சாட்டு உண்மையான காரணமாக இருக்கும் வாய்ப்பு குறைவே. தடைக்குப்பின் உள்ள உண்மையான காரணம் விரைவில் தெரிய வரலாம்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.