சென்னை புதுப்பேட்டை நோன்பு வழிபாட்டு பந்தலில் தீ விபத்துபுதுப்பேட்டையில் புதுப்பேட்டை வீரபத்திரன் தெருவில் 3 மாடி கட்டிடத்தின் மாடியில் தீ பிடித்தது. ரம்ஜான் நோன்பு வழிபாட்டுக்காக போடப்பட்ட கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
புதுப்பேட்டை வீரபத்திரன் தெருவில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் மாடியில் ரம்ஜான் நோன்பு வழிபாடு நடத்துவதற்காக கொட்டகை போடப்பட்டுள்ளது. இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஏற்பட்டனர்.
தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

புதுப்பேட்டையில் இரு சக்கர, நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. இந்த இடத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீ பிடித்தது. இதை தொடர்ந்து புரசைவாக்கம் ஷாப்பிங் மால் தீ பிடித்து எரிந்தது. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து, இன்று புதுப்பேட்டையில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.