சமூக சேவகர் எல்கேஎஸ் மீரானுக்கு துபாய் ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி!சமூக சேவகர் எல்கேஎஸ் மீரானுக்கு துபாய் ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் அமீரக வாழ் நெல்லைமாவட்ட மக்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவையினர் பலர் கலந்துகொண்டனர்.

அமீரகம் வாழ் ஒருங்கிணைந்த நெல்லை தமிழ் மக்கள் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் தாயகத்திலிருந்து வருகை தந்த பிரபல சமூக சேவகர் கல்வியாளர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்கேஎஸ் மீரான் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை துபாய் தேராவில் உள்ள ஸம்மிட் ஹோட்டலில் நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரகம் வாழ் அனைத்து தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரிகேசவநல்லூர் எஸ்எஸ் மீரான் தலைமை வகித்தார்.

அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி, ஈமான் பொதுச்செயலாளர் ஹமீத் யாசீன், ரிஃபாயியா தரீக்கா கலீஃபா அமீர் ஹம்ஸா, பேராசிரியர் கலந்தர் மீரான், அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான், துணைத்தலைவர் முஹம்மத் தாஹா, செயலாளர் வழுத்தூர் முஹைதீன் பாட்ஷா, ஈமான் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், ஈடிஏ பிபிடி மேலாளர் பீர் முஹம்மது ஆகியோர் வரவேற்று வாழ்த்தி உரையாற்றினர்.

இறுதியாக எல்கேஎஸ்.மீரான் உணர்ச்சிமிகு ஏற்புரை நிகழ்த்தினார். அமீரகம் வாழ் நெல்லை மாவட்ட மக்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவையினர் நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அரிகேசவநல்லூர் எஸ்எஸ் மீரானுடன் இணைந்து மேலப்பாளையம் நியாஸ் அலி மற்றும் சொக்கம்பட்டி முஸ்தஃபா நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.