மதவாத சக்திகளை ஓட ஓட விரட்டிய கிராம மக்கள்! மதவெறியர்கள் கதறல்!நாட்டில் மதப் பதற்றத்தை ஏற்படுத்த சிலர் எவ்வளவு தான் முயற்சி
செய்தாலும் மக்கள் தங்களது சகிப்புத் தன்மையால் அவர்களை வீழ்த்தி விடுகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ளது புன்னத்தலா கிராமம். இந்த கிராமத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய லட்சுமி நரசிம்ம மூர்த்தி விஷ்னு கோவில் உள்ளது.


இந்த கோவிலை புணரமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது. இதற்கு தேவையான பணத்தை அந்த கிராமத்தில் வாழும் முஸ்லீம்கள் வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், முஸ்லீம் இளைஞர்கள் கோவிலுக்கு மண்சுமத்தல், கல் சுமத்தல் போன்ற வேலைகளையும் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.

இதனையடுத்து விழா எடுக்க முடிவு செய்த கோவில் நிர்வாகத்தினர், அதனை புதுமையாக செய்ய விரும்பினர்.

இதனையடுத்து சகோதரர்களாய் வாழும் இஸ்லாமியர்களுக்கு நோன்பு விருந்து வைத்து, அந்த விழாவை கொண்டாட முடிவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சி இனிதாய் முடிந்தது. மதப் பகையை யார் ஏற்படுத்தினாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதை இந்த கிராமத்தினர் நிரூபித்து விட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.