இன்னும் திருந்தவில்லை;..... சென்னை சில்க்ஸ்வக்ப் சொத்து' ஆக்கிரமிப்பு வேலைகளை
கொஞ்சமும் நிறுத்தவில்லை..!

திருவள்ளூர் படேமகான் பள்ளிவாசலுக்கு சொந்தமான
100 கோடி ரூபாய் 'வக்ப்' சொத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன் (17-11-2016 அன்று) சட்டவிரோத பத்திரப்பதிவின் மூலம் சென்னை சில்க்ஸ் கிரையம் பெற்றது முதலே நாம் பல வழிகளில் போராடி வருகிறோம்.

நமது எந்த போராட்டமும் அவர்களின் பண பலத்துக்கு முன் எடுபடவில்லை.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களது சட்டவிரோத வேலைகளுக்கு நாம் தடை பெற்றுள்ள போதிலும் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தொடர்ந்து வேலைகளை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த 3 தினங்களுக்கு முன் அவர்களது கடை தீப்பிடித்து எரிந்ததையடுத்து

மனிதாபிமான அடிப்படையிலும், இஸ்லாமிய வழிக்காட்டுதல் அடிப்படையிலும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் முகமாக, வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதோடு,

தயை கூர்ந்து திருவள்ளூரில் வக்ப் இடத்தில் நடைபெற்றுவரும் வேலைகளை நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தோம்.

நமது வாய்ஸ் மெசேஜை கேட்டபின்னரும் நமது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து இரவு-பகலாக வேலை செய்து வருகின்றனர்.

அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்...

ஆனால், இந்த கணினி யுகத்தில் தெய்வமும் அவ்வப்போதே தண்டித்து விடுகிறது.

படிப்பினை பெறுவோருக்கு அன்றாட வாழ்வில், ஏராளமான அத்தாட்சிகள் கிடைத்துக் கொண்டு தான் உள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.