திருவாரூர் அருகே பரபரப்பு.. பேசிக்கொண்டிருந்தபோது ஐபோன் வெடித்து சிதறி இளைஞர் படுகாயம்பேசிக்கொண்டிருந்தபோது ஐபோன் திடீரென வெடித்து சிதறியது. இதில் சச்சின் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் முகந்தனூரைச் சேர்ந்தவர் சச்சின. இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் தனது ஐபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஐ போன் திடீரென வெடித்து சிதறியது.

இதில் முகம் மற்றும் காதுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த சச்சினை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருவாரூர் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதி நவீன, அதிக விலைமிக்க, அட்வான்ஸ்டு மாடல், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது என கூறப்படும் ஐ போன் வெடித்து சிதறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.