மாட்டிறைச்சி தடை: மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் !இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை செய்து நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராகவும், தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான மத்திய பாஜக அரசின் இச்செயலை கண்டித்து, தடை அரசாணையை திரும்பபெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை இரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இசட். முஹம்மது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜே.ஹாஜி ஷேக் வரவேற்றுப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. அபூபக்கர் சித்திக், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், திருவையாறு சட்ட மன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர் எம்.எல்ஏ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம் ஜெயினுலாபுதீன், விவசாயிகள் வாழ்வுரிமை இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கி.நா.பனசை அரங்கன், ஹனபியா பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி. அப்பாஸ் அலி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கரிகாலன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநகர செயலாளர் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.