முத்துப்பேட்டை அருகே கடலில் திசைமாறி கரை ஒதுங்கிய படகு மீட்புமுத்துப்பேட்டை அருகே கடலில் திசைமாறி கரை ஒதுங்கிய படகு மீட்டக்கபட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே  நடுக்கடலில் உள்ள  எம்ஜிஆர்  வாய்க்கால் பகுதியில்  படகு ஒன்று  கரை  ஒதுங்கியிப்பதை ஆசாத் நகரிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம்  கண்டனர். ஆனால் அதை அவர்களால் மீட்டெடுக்க முடியவில்லை. இதனையடுத்து கரைதிரும்பிய  மீனவர்கள்  ஆசாத் நகர் மீனவர் சங்க நிர்வாகிகளிடமும் முத்துப்பேட்டை கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணையில் அந்த படகு நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த செருத்தூர் கிராம பகுதியை சேர்ந்த மீனவர் நாகராஜ் என்பவரின் படகு என்றும், அவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பரசுராமன், சசி, பரமசிவம், குமார், நாகராஜ் ஆகியோருடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஜெகதாப்பட்டிணம் கடல் பகுதியில் நள்ளிரவில் கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து உள்ளது. இதில் இருந்த மீனவர்கள் இரவு முழுவதும் தத்தளித்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற ஜெகதாப்பட்டணம் மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் படகை மீட்க்க சென்றபோது படகை காணவில்லை. கடந்த நான்கு நாட்களாக தேடி வந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை மீனவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் வந்த படகு உரிமையாளர்  நாகராஜ் மற்றும் மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஆசாத் நகரிலிருந்து படகு மூலம்  கடலுக்கு சென்று மீட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.