பட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு !பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரம்:
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அறந்தாங்கி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பழனியப்பன் தெரு பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், தலையாரி தெரு சிட்டி யூனியன் வங்கி அருகில், அறந்தாங்கி சாலை முக்கம், பெருமாள் கோயில் ஆற்றுப்பாலம் ஆகிய இடங்களில் மட்டும் நின்று செல்ல வேண்டும்.

இதேபோல தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், சிட்டி யூனியன் வங்கி அருகில், அறந்தாங்கி சாலை முக்கம், அல்லா கோயில் தெரு புளிய மரத்தடி, சாமியார் மடம் ஆகிய நிறுத்தங்களிலும், முத்துப்பேட்டை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், நீதி மன்றம், மைனர் பங்களா, கைகாட்டி, தாலுக்கா அலுவலகம் ஆகிய நிறுத்தங்களிலும், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், சிட்டி யூனியன் வங்கி அருகில், அறந்தாங்கி சாலை முக்கம், லட்சத்தோப்பு இரட்டை சாலை ஆகிய நிறுத்தங்களிலும் மட்டும் நின்று செல்ல வேண்டும்.

தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தங்களைத் தவிர வேறு இடங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கினால் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதுடன் அவர் மீது வழக்கும் தொடரப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.