போதிய பணம் இல்லாததால் அமரர் ஊர்தி தர மறுப்பு : மனைவியின் உடலை பைக்கில் கொண்டு சென்ற கணவர்அமரர் ஊர்தி இல்லாததால் ஏழை கூலித் தொழிலாளி ஒருவர், இறந்த தனது மனைவியின் உடலை பைக்கில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் மாநிலத்தில் தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. ரானீபாரி என்ற கிராமத்தை சேர்ந்த சங்கர் ஷா என்பவரின் மனைவி சுசீலா. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு புர்னியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார். உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்க மறுத்ததாக தெரிகிறது. தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல ரூ.2,500 கேட்டதாக கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு அவரிடம் பணம் இல்லாததால் மனைவியின் உடலை தனது பைக்கில் வைத்து கொண்டு சென்றுள்ளார் சங்கர் ஷா. சங்கரின் மகன் பைக்கை ஓட்ட மனைவியின் உடலை பிடித்தபடி அவர் பின்னால் உட்கார்ந்த படி சென்றுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான இந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு அதிகாரிகளுக்கு பாட்னா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.