திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர் கடன் பெறஅழைப்புபுதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்  திருவாரூர் மாவட்டத்திற்கு இவ்வாண்டு இலக்காக 19 புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.190 லட்சம் மான்யம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாத காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும். முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத (அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பதுடன் ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது அதற்கு aமேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். வயது 21க்கு மேல் 35க்குள் இருக்க வேண்டும்.சிறப்பு பிரிவினர்களான மகளிர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்தினாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ஒரு கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவைத் தொழில் துவங்கலாம். பொது பிரிவினர்  தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். ஏனையோர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும்.வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
ஆர்வமுள்ள இளைஞர்கள், மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் உரிய விவரங்கள் பெற்று இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.