தாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவிதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சேர்ந்தவர் சல்மான் கான் (32), இவரின் மனைவி நக்மா கான் (25).

இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாளிலிருந்தே இந்தி நடிகர் சல்மான் கான் போல தனது கணவரை ஸ்டைலாக இருக்க நக்மா கூறியுள்ளார்.

மேலும் கணவரின் தாடியையும் நக்மா எடுக்க சொன்னார். ஆனால் சல்மான் கான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.நேற்றும் இதுகுறித்து நக்மா தனது கணவரிடம் பேச வாக்குவாதம் முற்றியது.

இதில் கோபமான நக்மா, அடுப்பில் இருந்த வெந்நீரை தூக்கி வந்து சல்மானின் முகத்தில் ஊற்றினார். இதையடுத்து வலியால் துடித்த சல்மானை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சல்மானின் முகம் 20 சதவீதம் வெந்து போயுள்ள நிலையில், போலீசார் நக்மா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.