துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சி!துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சி நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நோன்புக் கஞ்சியானது துபாய் தேரா பகுதியில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளிவாசல், லத்திபா பள்ளிவாசல் மற்றும் அஸ்கான் ஹவுஸ் பின்புறம் உள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ரமலான் மாதம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நாள்தோறும் நோன்பு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் துபாய் ஈமான் அமைப்பு சார்பில் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கங்சி வழங்கப்பட்ட வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெறுகிறது

4000 பேருக்கு கஞ்சி
தினமும் நான்காயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த நோன்புக் கஞ்சியின் மூலம் பயனடைந்து வருகின்றனர். நோன்புக் கஞ்சியுடன் இரண்டு சமோசாக்கள், ஆரஞ்சு பழம், ஜுஸ், பேரிச்சம் பழம், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

  பல்வேறு நாட்டு இஸ்லாமியர்கள்
இதனை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்து நோம்பு கஞ்சியை அருந்தி மகிழ்கின்றனர். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் கீழை ஏ.ஹமீது யாசின், துணைப் பொதுச்செயலாளர் பூதமங்கலம் முகைதீன் அப்துல் காதர், பொருளாளர் கீழை அப்துல் உபூர் காக்கா, துணைத் தலைவர் கீழை முஹம்மது மஹ்ரூப், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், சையது பாட்சா, லெப்பைக்குடிகாடு படேஷா பஷீர், வி.களத்தூர் சர்புதீன், இல்யாஸ், காயல் யஹ்யா முஹ்யித்தீன், ஆலோசகர் குத்தாலம் அஷ்ரப் அலி, கம்பம், முஹம்மது அலி, சீனிபாவா, சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 ஈமான் அமைப்புக்கு பாராட்டு
மேலும் லத்திபா பள்ளிவாசலில் காதர் முகைதீன், யாகூப் உள்ளிட்ட குழுவினரும், அஸ்கான் ஹவுஸ் பின்புறம் உள்ள பள்ளிவாசலில் காயல்பட்டணம் முஹம்மது ஈசா, ஹிதாயத்துல்லா, ரவூப் உள்ளிட்ட குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை பார்வையிட்ட திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஈமான் அமைப்பு செய்து வரும் பணிகளை பாராட்டினார்.

கடுமையான வெப்பத்திலும்
கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தன்னார்வ தொண்டர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தனது அமீரகப் பயணத்தில் இது மறக்க முடியாத நிகழ்வாகும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் தெரிவித்தார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.