அதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், ஜாம்புவானோடை ஊராட்சி, மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், தமிழரசி. இத்தம்பதியின் மகள் கலா ( 26 ). எம்.எஸ்.சி பட்டதாரி, இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு ஊராட்சி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஸ்டாலினுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து வைக்கப்பட்டது. இத்தம்பதிக்கு 2-1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஸ்டாலின் துபாய் நாட்டில் பணியாற்றி வருகிறார். கலா தனது மாமனார் கணேசன், மாமியார் சந்திரா ஆகியோருடன் தொக்காளிக்காடு வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் கலா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் கலா பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 3 வருடத்தில் கலா இறந்து போனதால், அவர் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தாரா? என்பது குறித்து பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.