முத்துப்பேட்டையில் மஜகவின் இஃப்தார் நிகழ்ச்சி! சகோதர சமுதாயத்தவர்கள் பங்கேற்பு!!
திருவாரூர்.ஜூன்.21., நேற்று 20/06/2017 செவ்வாய் கிழமை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் தக்பீர் நெய்னா முஹம்மது அவர்கள் தலைமையில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இதில் மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் இலக்கிய பேரவை, பத்திரிக்கையாளர் சங்கம், அரிமா சங்கங்களின் பிரதிநிதிகளும், அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தமாகா அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், மற்றும் முத்துப்பேட்டை ஜமாத் மஹல்லா நிர்வாகிகளும், இளைஞர்களும், சகோதர சமுதாய நண்பர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மஜக நகர துணை செயலாளர் நாஸர் அவர்கள் தலைமையிலான குழு சிறப்பாக செய்திருந்தது.
நகர மஜகவின் அழைப்பை ஏற்று வருகை தந்த அணைவருக்கும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன் அவர்கள் நன்றி கூறினார்.

தகவல்:
தகவல் தொழில் நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
முத்துப்பேட்டை நகரம்.
20/06/2017

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.