வருமான வரித்துறையின் அடுத்த குறி NRI யின் வங்கி கணக்குகள்: வெளிநாடு வாழ் இந்தியர் ?பல ஆண்டுகளாக இந்தியர்கள் பலர் தங்களை வெளிநாடு வாழ் இந்தியர் என கூறிக் கொண்டு, வரி கட்டுவதில் இருந்து தப்பித்து வருகின்றனர். வரி கட்ட வேண்டிய இந்தியர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு சென்று 182 நாட்கள் தங்கி, பின் தங்களை என்.ஆர்.ஐ., என கூறிக் கொண்டு வரி கட்டாமல் ஏமாற்றி வருகிறார்கள்.

இவர்கள் என்.ஆர்.ஐ., என கூறிக் கொள்வதால் இவர்களுக்கு வரும் நிதிகள் மற்றும் வங்கி கணக்குகள் சட்டபூர்வமான வருமானமாக அங்கீகரிக்கப்படுகிறது. இப்படி வரி ஏய்ப்பு செய்பவர்களை குறிவைத்து வரி செலுத்தும் படிவத்தில் புதிய முறையை வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது. இதன்படி, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருக்கும் வங்கி கணக்குகள் குறித்த விபரத்தை அளிக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்தாலும், இந்தியாவில் உள்ள பங்குகள், சொத்துக்கள், வங்கி முதலீடுகள், பாண்டுகள் உள்ளிட்டவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இனி வரி செலுத்தியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் வெளிநாடு வங்கி கணக்குகளுக்கான வங்கி கணக்கு எண்கள், அந்த வங்கி இருக்கும் நாடு, ஸ்ப்ட் கோடு, சர்வதேச வங்கி கணக்குகளின் எண்கள் (ஐபிஏஎன்) ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.