முத்துப்பேட்டை ஓர் அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

முத்துப்பேட்டை (Muthupet) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.  (இன்ஷா அல்லாஹ் விரைவில் தாலுக்கா ஆகும்)

முத்துப்பேட்டை 18 உறுப்பினர்களையும் ஒரு சேர்மேனையும் கொண்டு பேரூராட்சியாக இயங்கிவருகின்றது. முத்துப்பேட்டை காவிரி டெல்டா மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இங்கு உள்ள மக்கள் ஆரம்பகாலத்தில் கடலில் சென்று முத்து குழித்துதான் தங்களது வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர். அதுவே பிற்காலத்தில் முத்துநகர் என்றும் முத்துப்பேட்டை என்றும் அழைக்கப் பெற்றதாகவும் வரலாறு உண்டு.

இவ்வூரில் உள்ள சதுப்புநிலக் காடுகளுக்காகப் புகழ்பெற்றது.மக்கள் வகைப்பாடு :
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,541 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.  இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். முத்துப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முத்துப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அலுவலகங்கள்:
இங்கு மொத்தம் 11 பாடசாலைகள், 15 மருத்துவமனைகள், 61 தெருக்கள், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிறப்பு ஊராட்சி மன்ற அலுவலகம், சார்பதிவுகம், பேருந்து நிலையம், காவல் நிலையம், துணை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், பேருந்து நிலையம், இரயில்வே ஸ்டேசன், வார சந்தை, அரசு பொது நூலகம், வங்கிகள், நகை கடைகள், எக்ஸ்சேன்ஜ், சில்க்ஸ் & ரெடிமேட்ஸ் கடைகள், கலர் மீன் கடைகள், இன்டெர்னெட் மையங்கள், தொலை தொடர்பு அலுவலகம் உள்ளன.

தொழில் :
முத்துப்பேட்டை கடலோர பகுதியாக இருப்பதால் மீன் பிடி தொழிலும், தோப்புகள் நிறைந்து இருப்பதால் தேங்காய் வியாபாரமும் பிரதானமாக உள்ளது. பல மாநிலங்களுக்கு இங்கு இருந்து ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. இங்கு மொத்தம் 36 குளங்கள் உள்ளன, வயல்வெளிகள் மிகுந்து விவசாயமும் முக்கியமான தொழிலாக கருதப்படுகின்றது. அதிகமானோர் வளைகுடா நாடுகளிலும் வசித்து வருகின்றனர்.
 
நகர வளர்ச்சி :
முத்துப்பேட்டையிலிருந்து சுமார் 125 கி.மீ. தொலைவில் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையமும், 340 கி.மீ. தொலைவில் சென்னை அண்ணா விமான நிலையமும் உள்ளது. முத்துப்பேட்டையிலிருந்து தமிழகம் முழவதும் இணைப்பு பேருந்துகள், இரயில்வே வசதியும் அமைந்துள்ளது. சிறந்த கல்வி அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு ஆண், பெண் இருபாலருக்கும் பயனமையும் வகையில் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பொழுதுள்ள நிலையில் கல்வியின் வளர்ச்சி சற்று வளர்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது. ஆண்கள் மேல்நிலை பள்ளிதான் முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடமாகும். இப்பள்ளி சங்கத்து பள்ளிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.  இங்குள்ள பள்ளிகளில் மேல் நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அருகில் இருக்கும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருச்சி, தஞசாவூர், சென்னை என ஊர்களுக்கு சென்று பட்டபடிப்பும் பயில்கின்றனர். முத்துப்பேட்டையில் சில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் இன்னும் இவ்வூரில் வாழ்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
 
முத்துப்பேட்டை அமைவிடம் :  
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
தாலுக்கா திருத்துறைப்பூண்டி
ஆளுநர்
சி. வித்யாசாகர் ராவ்
அலுவலக தொடக்க நாள்
September 02,2016
பிறந்த தேதி : February 04,1942
பிறந்த இடம் : கரீம்நகர்
கல்வி :  B.Sc. B.L
முதலமைச்சர்  
கே. பழனிசாமி
மின்னஞ்சல்  : cmcell@tn.gov.in
சட்டமன்ற உறுப்பினர்கள் 
பி. ஆடலரசன்
மக்களவை உறுப்பினர்
டாக்டர். கே. கோபால்
மாவட்டஆட்சியர்
எல். நிர்மல் ராஜ் IAS
மாவட்ட ஆட்சியாளர்
திருவாரூர் - 610001
தொலைபேசி : 04366-223344,04366 224738,225142
தொலைப்பிரதி : 04366-221033
மின்னஞ்சல் : collrtvr(at)tn.nic.in
மக்கள் தொகை (2011)  மொத்தம் 21,541   ஆண் 9,431, பெண் 12,110
நேரவலயம் IST (ஒ.ச.நே.+5:30)      

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.